காதுகேளாதோர் சைகை காட்டி நூதன போராட்டம்


காதுகேளாதோர் சைகை காட்டி நூதன போராட்டம்
x

காதுகேளாதோர் சைகை காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

காதுகேளாதோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். அப்போது காதுகோளதோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சைகை காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை போராட்டத்தை கைவிடும்படி போலீசார் வலியுறுத்தினர். பின்னர் சங்க பிரதிநிதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமியை சந்திக்க போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story