காதுகேளாதோர் வார விழிப்புணர்வு பேரணி


காதுகேளாதோர் வார விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அரசு ஆஸ்பத்திரியில் காதுகேளாதோர் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

கோயம்புத்தூர்

கோவை

ஆண்டுதோறும் செப்டம்பர் மாத கடைசி வாரம் உலக காதுகேளாதோர் வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதை யொட்டி கோவை அரசு ஆஸ்பத்திரியின் காது, மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறை சார்பில் காதுகோளாதோர் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் டாக்டர்கள் அலி சுல்தான், சரவணன், மருத்துவ மாணவ-மாணவிகள், நர்சிங் மாணவிகள் பங்கேற்று கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

இது குறித்து டீன் நிர்மலா கூறும்போது, காது கேட்காமல் பிறக்கும் குழந்தைக்கு காக்ளியர் இம்பிளான்ட் என்ற அறுவை சிகிச்சை செய்தால் நன்றாக காது கேட்கும், வாய் பேசவும் முடியும். இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை களில் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.

ஆனால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்படுகிறது.

இங்கு இதுவரை 240 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்து உள்ளோம் என்றார்.


Next Story