அரூர் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலிகணவர் படுகாயம்


அரூர் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலிகணவர் படுகாயம்
x
தினத்தந்தி 16 July 2023 1:00 AM IST (Updated: 16 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் இலக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 50). இவருடைய மனைவி லட்சுமி (48) இவர்கள் நேற்று மொபட்டில் நாரியம்பட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு மொபட்டில் சென்றனர். அனுமன் தீர்த்தம் -நாரியம்பட்டி சாலையில், உள்ள ஒரு கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிவப்பிரகாசத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story