சர்க்கரை ஆலை தொழிலாளி விபத்தில் பலி


சர்க்கரை ஆலை தொழிலாளி விபத்தில் பலி
x
தினத்தந்தி 8 Aug 2023 1:00 AM IST (Updated: 8 Aug 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் சுருட்டையன் (வயது 55). இவர் நேற்று இரவு தனது விவசாய தோட்டத்தில் இருந்து ஜம்மனபட்டி கூட்ரோட்டு வழியாக தனது சொந்த ஊரான பட்டவர்த்திக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் வந்த சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுருட்டையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.


Related Tags :
Next Story