நீரில் மூழ்கி தொழிலாளி சாவு


நீரில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 Aug 2023 1:00 AM IST (Updated: 27 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த முகாமை சேர்ந்தவர் தீபாகரன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் நேற்று முன்தினம் அணையில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் அவரை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று அவரது உடல் அணையின் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் தீபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீன் பிடிக்க சென்ற அவர் அணையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story