கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதியதில் முதியவர் சாவு
தர்மபுரி
மொரப்பூர்:
தர்மபுரி மாவட்டம் செட்டிகரை அருகே உள்ள பள்ளகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 70). இவருடைய மகன் வழி பேத்திகள் கடத்தூர் அருகே உள்ள கந்தகவுண்டனூரில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக காளியப்பன் தனது மோட்டார் சைக்கிளில் தர்மபுரியில் இருந்து கந்தகவுண்டனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது போசிநாயக்கன அள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் காளியப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story