கந்திகுப்பம் அருகேதென்னை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
பர்கூர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் தீனா (23). கூலித்தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் சின்ன மட்டாரப்பள்ளி பகுதியில் தங்கி வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று 2 பேரும் மோட்டார்சைக்கிளில் சின்ன மட்டாரப்பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார்சைக்கிளை தீனா ஓட்டினார். ஏழுமலை பின்னால் அமர்ந்திருந்தார். கந்திகுப்பம் அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபாக இறந்தார். தீனா படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கந்திகுப்பம் போலீசார் விரைந்து வந்து தீனாவை மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.