கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில்அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ராணுவ வீரர் பலி


கிருஷ்ணகிரி  தேசிய நெடுஞ்சாலையில்அடுத்தடுத்து  வாகனங்கள் மோதி ராணுவ வீரர் பலி
x

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து, வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் பலியானார்.

கிருஷ்ணகிரி

குருபரப்பள்ளி

கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து, 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் பலியானார்.

ராணுவ வீரர் சாவு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருரப்பள்ளி அருகே மேலுமலை தனியார் நர்சிங் கல்லூரி எதிரில், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்றது. அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென வலது பக்கத்தில் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

அப்போது காரின் பின்னால் வந்த லாரியும் காரில் மோதியது. இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையை சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன் (வயது47) என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த ராணுவவீரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்தடுத்து மோதல்

அதேபகுதியில் விபத்து நடந்த, அடுத்த சில நிமிடத்தில் ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 3 லாரி, 6 கார்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வாகனங்களை அப்புறப்படுத்தினர்.

இந்த தொடர் விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து சீரான நிலையில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Related Tags :
Next Story