பர்கூர் அருகேதடுப்பணையில் மூழ்கி சிறுமி சாவு
பர்கூர் அருகே தடுப்பணையில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
பர்கூர்
பர்கூர் அருகே தடுப்பணையில் மூழ்கி சிறுமி பரிதாபமாக இறந்தார்.
சிறுமி
பர்கூர் அருகே உள்ள சின்னமல்லப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 15). சிறுமியின் தந்தை ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் சிறுமி தாத்தா முருகன் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவள் அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டிலேயே இருந்து வந்தாள்.
இந்தநிலையில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தோழிகளுடன் சிறுமி சத்யா அப்பகுதியில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றாள். அப்போது சத்யா திடீரென தடு்ப்பணையில் மூழ்கி தத்தளித்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழிகள் கூச்சலிட்டனர்.
தண்ணீரில் மூழ்கி சாவு
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்க முயன்றனர். அதற்குள் சிறுமி தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டாள். இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
தொடர்ந்து போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் மூழ்கி சிறுமி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.