குடும்ப தகராறில் தீக்குளித்த வியாபாரி சாவு


குடும்ப தகராறில் தீக்குளித்த வியாபாரி சாவு
x

குடும்ப தகராறில் தீக்குளித்த வியாபாரி உயிரிழந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள நயினார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 56). இவரது மனைவி ஈஸ்வரி (49). இவர்களுடைய மகன் பொன்முருகன் (28). மோகன்ராஜ் பழைய இரும்பு பொருட்கள் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன்ராஜ் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவரை காப்பாற்ற சென்ற ஈஸ்வரியும், பொன்முருகனும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்தநிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றிமோகன்ராஜ், அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். பொன்முருகன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Related Tags :
Next Story