அரசு பஸ் மோதியதில் கீழே விழுந்த மூதாட்டி சக்கரத்தில் சிக்கி சாவு


அரசு பஸ் மோதியதில் கீழே விழுந்த மூதாட்டி சக்கரத்தில் சிக்கி சாவு
x

பாலக்கோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது அரசு பஸ் மோதியதில் கீழே விழுந்த மூதாட்டி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு பஸ் நிலையத்தில் நின்றிருந்தபோது அரசு பஸ் மோதியதில் கீழே விழுந்த மூதாட்டி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

மூதாட்டி சாவு

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சின்னபாப்பா (வயது 72). இவர் உடல் நலம் சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பாலக்கோடு பஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்தார். அங்கிருந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக பஸ்சுக்காக அவர் காத்திருந்தார்.

அப்போது ஓசூரில் இருந்து தர்மபுரிக்கு சென்ற அரசு பஸ் மூதாட்டி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டியின் தலை மீது பஸ்சின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் சின்னப்பாப்பா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையத்தில் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி இறந்த சம்பவம் மற்ற பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story