ஓடையில் மூழ்கி கல்லூரி மாணவி சாவு


ஓடையில் மூழ்கி கல்லூரி மாணவி சாவு
x

ஓடையில் குளித்த கல்லூரி மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இறந்த மாணவி உடலை எரித்த தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

ஓடையில் குளித்த கல்லூரி மாணவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இறந்த மாணவி உடலை எரித்த தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உலகாணியை சேர்ந்தவர் ஆண்டி. இவரது மகள் முத்துலெட்சுமி (வயது 19). மதுரையில் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை கிராமத்தில் உள்ள ஓடையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆனால் போலீசார் வரும் முன்பே மாணவி முத்துலெட்சுமி உடலை மீட்ட உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்து விட்டனர். மாணவி முத்துலட்சுமியின் சித்தப்பா தகவல் அறிந்து வந்து விசாரிக்க வந்துள்ளார். மகளின் உடல் தகனம் செய்யப்பட்ட தகவலை அறிந்து தனிநபராக திருமங்கலம்-காரியாபட்டி சாலையில் மறியல் செய்தார். மறியலில் ஈடுபட்ட வரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

விசாரணை

உலகாணி கிராம நிர்வாக அதிகாரி வடிவேலு கொடுத்த புகாரின் பேரில் மாணவி உடலை எரித்த தந்தை ஆண்டி, தாத்தா முருகன் மற்றும் உறவினர்கள் பாக்கியராஜ், சுந்தரம் ஆகிய 4 பேர் மீது கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story