வடமாநில முதியவர் திடீர் சாவு


வடமாநில முதியவர் திடீர் சாவு
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்துக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வடமாநில முதியவர் திடீரென இறந்தார்.

ராமநாதபுரம்

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் மர்வாதியா பகுதியை சேர்ந்த சிலர் ராமேசுவரத்திற்கு சாமி தரிசனம் செய்ய ரெயிலில் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் மதுரை செல்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து பஸ்சில் ராமநாதபுரம் வந்தனர். நள்ளிரவில் ரெயில்நிலைய நுழைவு வாயில் பகுதியில் படுத்திருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த ராம்தேவ் (வயது 80) என்பவர் தூங்கிய நிலையிலேய திடீரென இறந்துவிட்டார். காலையில் அவரை எழுப்பியபோது அவர் இறந்தது தெரிய வந்தது. ஏற்கனவே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story