தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் சாவு பரிதாபமாக இறந்தார்.
சிவகங்கை
திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த வன்னிகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). இவர் தென்னை மரத்தில் ஏறி கூலிக்கு தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று செல்லப்பனேந்தல் கிராமத்தில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம்போஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story