ரெயிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
முதியவர் ஒருவர் ரெயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
சிவகங்கை
காரைக்குடி
மானாமதுரையில் இருந்து மன்னார்குடிக்கு நேற்று பயணிகள் ரெயில் சென்றது. காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் வந்தபோது அதில் பயணம் செய்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நிலை தடுமாறி ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து காரைக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர் அ.தி.மு.க. கட்சி வேட்டி அணிந்திருந்தார். அவரது சட்டை காலர் பகுதியில் அலீப் டெய்லர் கல்லல் என்று இருந்தது. அதன்அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story