மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி மாஸ்டர் சாவு


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி மாஸ்டர் சாவு
x
தினத்தந்தி 5 March 2023 6:45 PM GMT (Updated: 5 March 2023 6:46 PM GMT)

பர்கூர் அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; பேக்கரி மாஸ்டர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

திருப்பத்தூர் மாவட்டம் வெலகலநத்தம் அருகே உள்ள செட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 23). பேக்கரி மாஸ்டர். இவர் பர்கூர் அருகே உள்ள தபால் மேடு பகுதியில் இருந்து ஒப்பதவாடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் அப்போது ஒப்பதவாடி கூட்ரோடு பகுதியில் சென்றபோது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி கோழிகளை ஏற்றிவந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பர்கூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story