அரசு பஸ் சக்கரம் ஏறி பெயிண்டர் சாவு


அரசு பஸ் சக்கரம் ஏறி பெயிண்டர் சாவு
x

ஆத்தூரில் மொபட்டில் சென்றபோது தவறி விழுந்ததில் அரசு பஸ் சக்கரம் ஏறி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஆத்தூர்

ஆத்தூரில் மொபட்டில் சென்றபோது தவறி விழுந்ததில் அரசு பஸ் சக்கரம் ஏறி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

பெயிண்டர் சாவு

ஆத்தூர் மந்தைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் என்கிற ஜோசப் (வயது 35). பெயிண்டர். இவருக்கு ஜெயப்பிரதா என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் ஜோசப் நேற்று மதியம் தனது மொபட்டில் வீட்டில் இருந்து ஆத்தூர் டவுன் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆத்தூர் காமராஜ் நகர் பகுதியில் மொபட் நிலைதடுமாறியதில், அதில் இருந்து ஜோசப் தவறி சாலையில் விழுந்தார். அப்போது சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அரசு பஸ் டிரைவர் கைது

விபத்து நடந்த பகுதி போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடம் என்பதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார், ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைத்து, போக்குவரத்தை சீரமைத்தனர். விபத்து குறித்த புகாரின்பேரில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக பஸ் டிரைவரான தலைவாசல் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியை சேர்ந்த ஞானசேகரன் (53) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர், பஸ் சக்கரம் ஏறியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story