மாரண்டஅள்ளியில்சிமெண்டு சீட் உடைந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளியில் சிமெண்டு சீட் உடைந்து கீழே விழுந்த தொழிலாளி இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
சென்ட்ரிங் தொழிலாளர்கள்
மாரண்டஅள்ளி கணபதி நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அப்பகுதியில் டிரேடர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையின் மேற்கூரை பலத்த காற்றினால் சேதமடைந்தது. இதனை சரி செய்ய நேற்று குத்தலஅள்ளியை சேர்ந்த மாதன் (வயது 55), ஜக்கசமுத்திரத்தை சேர்ந்த வெங்கடேசன் (45) ஆகிய இரண்டு வெல்டிங் தொழிலாளர்களை அழைத்து வந்து மேற்கூரை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தினார்.
அப்போது வேலை செய்து கொண்டிருந்தபோது மேற்கூரையின் சிமெண்டு சீட் உடைந்து இருவரும் தவறி கீழே விழுந்தனர். இதில் மாதனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வெங்கடேசனுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வழக்குப்பதிவு
அங்கு மாதனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வெங்கடேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் கடை உரிமையாளர் வெங்கடேசன், கடை நடத்துபவர் இளங்கோ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.