டிராக்டர் மோதி வாலிபர் பரிதாப சாவு


டிராக்டர் மோதி வாலிபர் பரிதாப சாவு
x

கடத்தூர் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பரிதாப இறந்தார்.

தர்மபுரி

மொரப்பூர்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி தென் சந்தையூர் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா மகன் அப்துல்லா (வயது 21). இவர். பி.எஸ்சி. படித்து விட்டு தனியார் ஒப்பந்த வேலை செய்து வந்தார். இதே பகுதியை சேர்ந்த அமீர் மகன் ராஜ் முகம்மது (34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கடத்தூர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜ் முகமது ஓட்டிச்சென்றார். அப்துல்லா மோட்டார் சைக்கிளின் பின்புறமாக உட்கார்ந்து சென்றார். நத்தமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த டிராக்டர் எந்தவித சிக்னலும் காட்டாமல் திடீரென வலது புறமாக திரும்பிய போது எதிர்பாராத விதமாக டிராக்டர் ராஜ் முகமது ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பின்புறமாக உட்கார்ந்து வந்த அப்துல்லாவுக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற ராஜ் முகம்மது படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story