பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் திடீர் சாவு


பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் திடீர் சாவு
x

சேலத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் திடீரென உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலத்தில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் திடீரென உயிரிழந்தார். அவருடைய இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர் சாவு

சேலம் தாதகாப்பட்டி வேலு புதுத்தெரு முதல் கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி செல்வி. இவர்களின் மகன் கிரி (வயது 18). இவர் சமீபத்தில் முடிவடைந்த பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதி உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மாணவர் கிரி திடீரென இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரின் உடலை இரவோடு, இரவாக உறவினர்கள் மணியனூரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். ஆனால் போதை ஊசி செலுத்தியதால் மாணவர் இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் வருவாய்த்துறையினர் மாணவரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, கிரியின் தாயார். தனது மகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததாகவும், அதனால் அவன் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும் மாணவரின் சாவில் சந்தேகம் உள்ளதால் கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை பெற்று உடலை தோண்டி எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கிரியின் நண்பர்கள் யார்? அவர்களுக்கு ஏதேனும் போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story