மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி


மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; வாலிபர் பலி
x
திருப்பூர்


அவினாசியை அடுத்து சுண்டக்காம்பாளையத்தைச் சேர்ந்த அவினாசி மகன் பெருமாள் சாமி (வயது20). இவர் நேற்று முன்தினம் நண்பர் வெங்கடேஷ் (13) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை பெருமாள் சாமி ஓட்டினார். பின் இருக்கையில் வெங்கடேஷ் அமர்ந்திருந்தார். அவினாசியை அடுத்த நம்பியாம்பாளையம் அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த சரக்குவேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த விபத்தில் பெருமாள் சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த வெங்கடேஸ்வரன் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story