பெயிண்ட் அடிக்கும் போது தவறி விழுந்தவர் சாவு
பெயிண்ட் அடிக்கும் போது தவறி விழுந்தவர் இறந்தார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
வத்திராயிருப்பை அடுத்துள்ள மறவர் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 58). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. ஸ்ரீவில்லிபுத்தூர் மஞ்சப்பூ தெரு அருகே ஒரு நிறுவனத்தில் பெயிண்ட் அடிக்கும் பணியில் அவர் ஈடுபட்டபோது மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story