முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா


முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
x

ரிஷிவந்தியம் அருகே முத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா கடந்த 3-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் 6-ம் நாள் திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story