ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் சாவு


ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் சாவு
x

பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் இறந்ததாக கூறி டிரைவர் கண்டக்டருடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

பொள்ளாச்சி அருகே ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த அழகுக்கலை பெண் நிபுணர் இறந்ததாக கூறி டிரைவர், கண்டக்டருடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அழகு கலை நிபுணர்

பொள்ளாச்சி குமரன்நகர் சுந்தரம் லே-அவுட்டை சேர்ந்தவர் வருபவர் சக்திவேல். பால் பாக்கெட் வினியோகஸ்தர். இவருடைய மனைவி சிவசக்தி (வயது 37).

இவர் கடந்த 10 ஆண்டுக ளாக அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக பொள்ளாச்சியில் இருந்து ஈரோட்டிற்கு செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் இருந்து விழுந்தார்

அந்த பஸ் பொள்ளாச்சியை அடுத்த பல்லடம் மெயின் ரோட்டில் சந்தமநாயக்கன்பாளை யத்தில் காலை 6 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.

டிரைவர் இருக்கைக்கு பின்னால் உள்ள இருக்கையில் சிவசக்தி உட்கார்ந்து இருந்தார். அவர் எழுந்து பஸ்சிற்குள் நடக்க முயன்றார்.

அப்போது திடீரென்று அவர் நிலைதடுமாறி படிக்கட்டு வழியாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பயணிகள் வாக்குவாதம்

இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், பஸ்சில் கதவு இருந்தும் பூட்டாமல் இருந்ததால் தான் சிவசக்தி பஸ்சில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக அவர்கள், அந்த அரசு பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சிவசக்தியின் கணவர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டைபோலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சிவக் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story