மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு
x

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் இறந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

வேலூர் நவநீதம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 20). கர்நாடக மாநிலம் பெங்களூரு தேவசிங்கனஅள்ளியை சேர்ந்தவர் பிரதீப் (29). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து வேலூருக்கு சென்று கொண்டு இருந்தனர். மொபட்டை லோகேஷ் ஓட்டி சென்றார். பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பிரதீப் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story