விஷப்பூச்சி கடித்து இளம்பெண் சாவு


விஷப்பூச்சி கடித்து இளம்பெண் சாவு
x

விருதுநகர் அருகே விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது73). இவரது மகள் பழனி செல்வி (27). இவர் வீட்டிற்கு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த போது காலில் ஏதோ விஷப்பூச்சி கடித்து விட்டதாக கூறியுள்ளார். இந்தநிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுபற்றி சுப்பையா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Related Tags :
Next Story