சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

சென்னை அண்ணாசாலை மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசல் (வயது 39). இவருடைய தம்பி சைபில் சைக், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2 வாரங்களாக கட்டிட பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தனது தம்பியை பார்ப்பதற்காக வந்த குலாம் ரசல், சைபில் சைக் பணிபுரிந்த மின்வாரிய அலுவலகத்தின் 10-வது மாடிக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல், 10-வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story