மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு


மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு
x

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

கோயம்புத்தூர்

கோவை

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஹரிஹரன் நேற்று காலை சிங்காநல்லூரில் இருந்து உக்கடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் கோவை-திருச்சி ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிள் சுங்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் ஹரிஹரன் மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தார்.

சுமார் 30 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் இரும்பு தடுப்புகள் மேம்பாலத்தில் வைக்கப்பட்டது. கோவை-திருச்சி ரோடு மேம்பாலம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்தார். தற்போது மீண்டும் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டு உள்ள சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.


Next Story