படுகாயத்துடன் மயங்கி கிடந்தவர் சாவு
திண்டிவனம் அருகே படுகாயத்துடன் மயங்கி கிடந்தவர் சாவு போலீசார் தீவிர விசாரணை
விழுப்புரம்
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள மேல்பேட்டை பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் தலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவருக்கு தலையில் எவ்வாறு காயம் ஏற்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story