ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x

வள்ளியூரில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூரை சேர்ந்தவர் முகைதீன் அப்துல் காதர் (வயது 51), ஆட்டோ டிரைவர். இவர் வள்ளியூர் காந்திஜி காலனியில் ஆட்டோவில் சென்று கொண்டிருக்கும் போது வள்ளியூரை சேர்ந்த மாணிக்கம் (24), மனோஜ் (20) ஆகிய இருவரும் மது போதையில் ஆட்டோவை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது முகைதீன் அப்துல் காதரை அவதூறாக பேசி, கட்டையால் ஆட்டோ கண்ணாடியை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து முகைதீன் அப்துல் காதர், வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சகாய ராபின் சாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணிக்கம், மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.


Next Story