தனியார் நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
தனியார் நிறுவன மேலாளருக்கு கொலை மிரட்டல்
விழுப்புரம்
விழுப்புரம்
விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் சீத்தாராமன்(வயது 30). இவர் விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகர் பகுதியில் உள்ள ஒரு கார் சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிறுவனத்தில் திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த முகமதுஷெரீப் என்பவர், தனது காரை சர்வீசுக்காக விட்டுச்சென்றார். ஆனால் 5 நாட்கள் ஆகியும் சர்வீஸ் செய்யாததால் ஆத்திரமடைந்த முகமதுஷெரீப், அந்நிறுவன மேலாளர் சீத்தாராமனை செல்போனில் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து சீத்தாராமன் கொடுத்த புகாரின் பேரில் முகமதுஷெரீப் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story