பெண்ணுக்கு கொலை மிரட்டல்
தட்டார்மடம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
தட்டார்மடம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்த இசக்கிமுத்து மனைவி வேலம்மாள் (வயது 38) இவர் அதே ஊரை சேர்ந்த, உறவினர் சுப்பையா மகள் திருமணத்திற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 13 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் நகைகளை திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கேட்டு வந்ததில் அவர்களுக்குள் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் நேற்று சுப்பையாவிடம் வேலம்மாள் நகைகளை திருப்பி கேட்டதில் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த சுப்பையா, அவரது மனைவி லட்சுமி, மகன் கருப்பசாமி ஆகிய 3 பேரும் வேலம்மாளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுப்பையா உள்ளிட்ட 3 பேர் மீதும் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தேடிவருகின்றனர்
Related Tags :
Next Story