பெண்ணுக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்; கணவர் கைது
x

நெல்லையில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது39). இவருடைய மனைவி ஆறுமுகம் (36). இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆறுமுகம், பாளையங்கோட்டை அருகே உள்ள உத்தமபாண்டியன்குளத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் முருகன் தனது மனைவி ஆறுமுகத்தை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.


1 More update

Next Story