பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தனியார் நிறுவன மேலாளர் கைது


பெண்ணுக்கு கொலை மிரட்டல்:  தனியார் நிறுவன மேலாளர் கைது
x

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்


கோவை ரத்தினபுரி, சாமியப்பன் வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மனைவி ரேஷ்மா (வயது 27).இவரது பெற்றோர் ரேஷ்மா திருமணத்துக்காக அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (47) என்பவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தனர். அந்தப் பணத்தை வட்டியுடன் அவர்கள் திரும்ப கொடுத்து விட்டனர்.இந்த நிலையில் மேலும் பணம் கேட்டு வேணுகோபால், ரேஷ்மா வீட்டுக்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். இவர் மீது கொலை மிரட்டல், கந்துவட்டி தடுப்புச் சட்டம் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story