அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல்; 2 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டையில் ஆய்வு பணிக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அமைச்சார் அம்மன் கோவில் தெருவில் உள்ள அமைச்சார் அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சிவகரன் மற்றும் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் அங்குள்ள கடைகளை ஆய்வு செய்ய சென்றனர். அப்போது இவர்களிடம் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் மணிராஜ்(36) மற்றும் ஆரப் அலி ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மணிராஜ், ஆரப் அலி ஆகியோர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story