தாய், மகளுக்கு கொலை மிரட்டல்


தாய், மகளுக்கு கொலை மிரட்டல்
x

திருமணத்துக்கு பெண் தர மறுத்ததால் தாய், மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவசாயி கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்:

தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகள் தமிழ்ச்செல்வி(வயது 33). இவர் மும்பையில் ரெயில்வே டெக்னிக்கல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை திருமணம் செய்து கொள்வதற்காக வேளானந்தலை சேர்ந்த விவசாயியான கருப்பையா (37) என்பவர் பெண் கேட்டார். அதற்கு தமிழ்ச்செல்வியின் தாய் அசலாம்பால் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வியை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதை தடுத்த தமிழ்ச்செல்வியின் தாய் அசலாம்பாலையும் அவர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.


Next Story