தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்


தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல்
x

கோட்டூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் மாதந்தோறும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாலையோரங்களில் மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று முன்தினம் நடந்தது. பணியாளர்கள் அடைப்புகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோட்டூரை சேர்ந்த ரமேஷ்குமார், ரவிக்குமார், அரவிந்தன் ஆகிய 3 பேர், தூய்மை பணியில் ஈடுபட்ட சம்பத்குமார் உள்பட 7 பேரை பொது இடத்தில் வைத்து தகாத வார்த்தையால் திட்டினர்.

மேலும் அவர்கள் பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததுடன், வேலையை விட்டு தூக்கி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ்குமார், ரவிக்குமார், அரவிந்தன் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story