தொழிலாளிக்கு கொலை மிரட்டல்


தொழிலாளிக்கு கொலை மிரட்டல்
x

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

திருநெல்வேலி

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி அம்மன் சன்னதி தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் மோகன்துரை (வயது 39). இவர் வெல்டிங் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு நின்று கொண்டு, உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த அதே ஊரைச் சேர்ந்த திரவியம் மகன் நம்பிராஜன் மோட்டாசைக்கிளை அங்கும், இங்குமாக தாறுமாறாக ஓட்டி வந்து, மோகன்துரை மீது மோதுவது போல் வந்தார். இதைப்பார்த்த அவர் விலகிக் கொண்டார். இதையடுத்து அவர் நம்பிராஜனிடம், `பார்த்து போ' என்று கூறினார். நம்பிராஜன் மோட்டார்சைக்கிளை நிறுத்தியபோது தடுமாறி கிழே விழுந்தார். இதனால் நம்பிராஜன் ஆத்திரம் அடைந்து மோகன்துரையை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story