திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக அணுகு சாலை அமைக்க முடிவு


திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக அணுகு சாலை அமைக்க முடிவு
x

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தார்.

திருச்சி

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தார்.

அணுகு சாலை

திருச்சியில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது.இ்க்கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் பலர் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்வதும் உண்டு. அவர்கள் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து சமயபுரம் செல்ல திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை தான் கடக்க வேண்டும்.

இது தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் வேகமாக செல்லும். மேலும் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துகள் நடைபெறும். எனவே சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிக அணுகு சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இதற்கான ஆய்வு பணி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து சமயபுரம் வரை நடைபெற்றது.

ஆய்வு

மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பால்வண்ண நாதன் தலைமையில் சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தாமஸ் ராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.அப்போது மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பால்வண்ண நாதன், தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடக்கும் இடங்களை குறிக்கும் வகையில் இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.மேலும் எச்சரிக்கை குறியீட்டு பலகைகள் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Related Tags :
Next Story