இளையான்குடியை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் காப்பீட்டு ெதாகை வழங்க வேண்டும்-யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்


இளையான்குடியை வறட்சி பகுதியாக அறிவித்து பயிர் காப்பீட்டு ெதாகை வழங்க வேண்டும்-யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 19 July 2023 6:46 PM GMT)

இளையான்குடி ஒன்றியத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பிரதமரின் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி ஒன்றியத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பிரதமரின் பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

யூனியன் கூட்டம்

இளையான்குடி யூனியன் கூட்டம் அதன் தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் முருகானந்தம்: வல்லக்குளம், ஒச்சந்தட்டு, தோக்கினேந்தல் ஆகிய கிராமங்களில் புதிய சாலைகளை விரைவில் அமைக்க வேண்டும்.

கவுன்சிலர் முருகன்: விவசாயிகள் மானியம் பெறும் வகையில் உள்ள திட்டங்களை தெரிந்து கொள்ள விதை நெல் இருப்பு, இயற்கை உரம், விவசாய தளவாட சாமான்கள் எளிதில் கிடைக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இளையான்குடியை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்

தடுப்புச்சுவர்

கவுன்சிலர் கீர்த்தனா கனகராஜா: பிடாரனேந்தல் விலக்கில் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கவும், திருவேங்கடம் குடியிருப்பு பகுதிகளில் பேவர்பிளாக் சாலை அமைக்கவும், விளாங்குளம்-புதூர் சாலையில் சாய்ந்துள்ள மின் கம்பங்களை சரிசெய்ய வேண்டும். தாயமங்கலம் சாலையை விரைவு சாலையாக மாற்றி திருவள்ளூர் கண்மாய் கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். கவுன்சிலர் சங்கம்மாள் மணிமாறன்: பெத்தநேந்தல் கிராமத்தில் அம்மன் கோவில் பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், எஸ்.காரைக்குடி கிராமத்தில் குளியல் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய சாலை

கவுன்சிலர் சண்முகம்: அண்டக்குடி, புதூர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இளையான்குடி ஒன்றியத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பிரதம மந்திரியின் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் சீமைச்சாமி; முனைவின்றி கிராமச் சாலையை புதிய தார்சாலையாக மாற்றி தர நடவடிக்கை ேவண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

முடிவில் ஒன்றிய சேர்மன் முனியாண்டி நன்றி கூறினார்.


Next Story