குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த வேண்டும்;கலெக்டர் அலுவலகத்தில் மனு

குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த வேண்டும்;கலெக்டர் அலுவலகத்தில்  மனு
x

குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மனு

ராஜாக்கமங்கலம் தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்பு தலைவர் நடராஜன், செயலாளர் முருகேசன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம், துணைசெயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேங்காய் விலை சரிவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.150 ஆக உயர்த்த வேண்டும். தென்னை விவசாயிகளின் நலன் காக்க தென்னை நலவாரியத்தை தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும். தேங்காய் ஏற்றுமதியில் உள்ள இடர்பாடுகளை களைய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகத்தை சென்னையில் இருந்து உடுமலை வட்டம் தளியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு சொந்தமான தென்னை நாற்றுப் பண்ணை வளாகத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Next Story