சேலம் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 6 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 2 பேர், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி பகுதியில் தலா ஒருவரும், சேலம் மாவட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து வந்த ஒருவரும், தர்மபுரியில் இருந்து வந்த ஒருவரும் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை வருவதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். எனவே, பொது இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story