போலி ஆவணங்கள் மூலம் நடந்த பத்திரப்பதிவு செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு


போலி ஆவணங்கள் மூலம் நடந்த பத்திரப்பதிவு செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு
x

போலி ஆவணங்கள் மூலம் நடந்த பத்திரப்பதிவு செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், மேனகா, அம்மு உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில், மாதவரம், தணிகாச்சலம் நகரில் கஸ்தூரி என்பவரிடம் இருந்து 1982-ம் ஆண்டு எங்கள் தந்தை நிலம் வாங்கினார். இந்த நிலையில், இந்த நிலம் தங்களுக்குரியது என்று ரவுடி கும்பல் உரிமை கோரியது. இந்த நிலத்தை தசரதராவ் என்பவர் 1970-ம் ஆண்டு வாங்கியதாக அவர்கள் ஆவணங்களை காட்டினர். இதுகுறித்து மாதவரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்தபோது, தசரதராவ் பெயரில் உள்ள ஆவணங்கள் போலியானது என்று கூறினர். இதுகுறித்து, கடந்த 2014-ம் ஆண்டு நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், ருசியேந்திரமணி, தசரதராவ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தசரதராவ் மகள் ஜெயந்திராவ், நிலத்தை 2013-ம் ஆண்டு கிரிஜாபாய் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். அவர், இந்த நிலத்தின் பொது அதிகாரத்தை அசோக்குமாருக்கு வழங்கியுள்ளார். இதுதொடர்பான பத்திரப்பதிவுகளை ரத்த செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். மனுதாரர் தரப்பில் பி.ஆறுமுகராஜன் வாதிட்டார். இதையடுத்து, "தசரதராவ் பெயரில் உள்ள பத்திரம் போலியானது என்று பதிவுத்துறை கூறியுள்ளதால், அந்த பத்திரத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ள விற்பனை மற்றும் பொது அதிகார பத்திரங்கள் சட்டபடி செல்லாது. எனவே, இந்த பத்திரப்பதிவுகளை ரத்து செய்கிறேன்" என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story