தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம்


தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:46 PM GMT)

தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

பாரதிய ஜன சங்க நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா நினைவு தினம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளம் கிராமத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் சங்கிலி பாண்டியன், பா.ஜனதா வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன், தென்காசி மாவட்ட துணைத்தலைவர் பால சீனிவாசன், மாவட்ட செயலாளர் புலிக்குட்டி, மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் சிவகிரி அருகே தேவிபட்டினம் கிராமத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் சோழராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்ட பா.ஜனதா தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மத்தளம்பாறை சோஹோ மென்பொருள் நிறுவனத்துக்கு எதிரில் செங்குளம் கரையில் 500 பனை விதைகள் விதைக்கும் விழா நடந்தது. கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார்.

பா.ஜ.க. வெளிநாடு வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் அ.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் பால்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ரங்கராஜன், செயலாளர் சுமு.முருகன், மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் சங்கரநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story