சிற்றாறு- குற்றாலம் மெயின் அருவிக்கு தீப ஆரத்தி விழா; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்துகிறது


சிற்றாறு- குற்றாலம் மெயின் அருவிக்கு தீப ஆரத்தி விழா; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்துகிறது
x
தினத்தந்தி 11 Jun 2023 6:45 PM GMT (Updated: 11 Jun 2023 6:45 PM GMT)

சிற்றாறு- குற்றாலம் மெயின் அருவிக்கு தீப ஆரத்தி விழா நடத்தப்பட உள்ளது என அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தென்காசி

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் பொறுப்பாளர் புத்தானந்த சரஸ்வதி தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நதிகளை பாதுகாக்க வேண்டும். நதிகளை போற்ற வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம் மற்றும் முண்டகக் கன்னி அம்மன் அறக்கட்டளை சார்பில் குற்றாலம் மெயின் அருவி மற்றும் இந்த அருவியில் இருந்து உருவாகும் சிற்றாறு ஆகியவற்றிற்கு தீப ஆரத்தி பெருவிழா வருகிற ஜூலை மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு குற்றால நதியின் புனிதநீர் கலசங்களுக்கு வேள்வி வழிபாடுகள், மகா ஆரத்தி மற்றும் தென்காசி யானை பாலம் பகுதியில் உள்ள சிற்றாற்று படித்துறை ஆகியவற்றில் ஆரத்தி திருவிழா நடைபெறுகிறது. நெல்லையில் தாமிரபரணிக்கு நடைபெற்ற புஷ்கர விழா போன்று குற்றாலத்தில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசியில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்க பொருளாளர் வேதாந்த ஆனந்தா சுவாமி, இணை செயலாளர் சிவராமானந்தா, முண்டகக் கன்னி அம்மன் அறக்கட்டளை நிர்வாகி செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story