ஆசனூர் அருகே லாரி மோதி 3 புள்ளிமான்கள் பலி- டிரைவர் மீது வழக்குப்பதிவு


ஆசனூர் அருகே லாரி மோதி 3 புள்ளிமான்கள் பலி- டிரைவர் மீது வழக்குப்பதிவு
x

ஆசனூர் அருகே லாரி மோதி 3 புள்ளிமான்கள் இறந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு

தாளவாடி

ஆசனூர் அருகே லாரி மோதி 3 புள்ளிமான்கள் இறந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புள்ளிமான்கள் இறந்து கிடந்தது

ஈரோடு மாவட்டம் ஆசனூரை அடுத்த அரேபாளையம் பிரிவு அருகே சாலையில் நேற்று காலை 7 மணி அளவில் 3 புள்ளிமான்கள் இறந்துகிடப்பதாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று இறந்து கிடந்த புள்ளிமான்களை பார்வையிட்டனர். அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான்கள் இறந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர் காரப்பள்ளம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

லாரி மோதியது

விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரை சேர்ந்த மல்லு (வயது 27) என்பதும், சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் கரும்பு பாரத்தை இறக்கிவிட்டு மீண்டும் சாம்ராஜ்நகருக்கு கரும்பு பாரம் ஏற்ற சென்று கொண்டிருந்ததும் ஆசனூர் அருகே அதிவேகமாக சென்றபோது ரோட்டை கடந்த 3 புள்ளிமான்கள் லாரி மோதி இறந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மல்லு மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இறந்த 3 புள்ளிமான்களின் உடலும் ஆசனூர் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


Related Tags :
Next Story