கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு.


கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு.
x

கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு.

திருப்பூர்

மங்கலம்,

சாமளாபுரம் பேரூராட்சி-வி.அய்யம்பாளையம் பகுதியில் நேற்று (ஞாயிறு) காலை 10 மணிக்கு புள்ளிமான் அவ்வழியாக வழிதவறி வந்தது.அப்பகுதியில் புள்ளிமானை நாய்கள் துரத்தியதால் புள்ளிமான் வி.அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்து வந்தபல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து பல்லடம் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான 8 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். 100 அடி ஆழமும், 10 அடிக்கு தண்ணீர் இருந்த கிணற்றில் புள்ளிமான் தத்தளித்தது. கயிறு மூலம் கட்டி புள்ளிமான் மேலே கொண்டு வரப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் புள்ளிமானை மீட்கும்போது பார்த்துச்சென்றனர்.
Next Story