அவதூறு பேச்சு - ஏ.வி.ராஜுவுக்கு நோட்டீஸ்


அவதூறு பேச்சு - ஏ.வி.ராஜுவுக்கு நோட்டீஸ்
x

ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை,

கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி அவதூறு கருத்துகள் கூறியதாக , அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அவதூறு பேச்சால் நான் மட்டுமின்றி தனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஏ.வி.ராஜுவின் கருத்து தனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரத்தில் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்காவிட்டால் ஏ.வி.ராஜு மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கடாச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 More update

Next Story