முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. நிர்வாகிகள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள மேலாத்தூரை சேர்ந்தவர் நிலாகண்ணன். இவர், நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி தொகுதி தலைவராக உள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பும் வகையில் தகவல் பதிவிட்டுள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விமலாதிராஜன் தலைமையிலான நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சி பிரமுகர் நிலாகண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story