537 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்


537 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்
x

கப்பலூர் காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் 537 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை மாணிக்கம்தாகூர் எம்.பி. வழங்கினார்.

மதுரை

திருமங்கலம்,

கப்பலூர் காமராஜர் கலை அறிவியல் கல்லூரியில் 537 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை மாணிக்கம்தாகூர் எம்.பி. வழங்கினார்.

பட்டமளிப்பு விழா

திருமங்கலம் கப்பலூரில் காமராஜர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றார். .சிறப்பு விருந்தினராக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

பட்டமளிப்பு விழாவின் போது பெற்றோர்களை கண்டிப்பாக அழைத்து வர வேண்டும். தங்களுடைய குழந்தைகளை பட்டதாரியாக உருவாக்கக்கூடிய பெருமை அவர்களுக்கு உண்டு. அடுத்த முறை பட்டமளிப்பு விழாவிற்கு வரும்போது பெற்றோர்களை அழைத்து வாருங்கள். கல்லூரி மாணவர்கள் பட்டம் பெற்று உண்மையான உலகத்தில் அடி எடுத்து வைக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்காக பட்டம் பெற பாடுபட்டனர். நீங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளவும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நீங்கள் முன்னேறும் வண்ணம் செயல்பட வேண்டும்.

திருமங்கலம் காமராஜர் கல்லூரியில் படித்த நீங்கள் பட்டம் பெற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொண்டு நாட்டிற்கு உங்களுடைய செயல்பாடுகளை அளிக்க வேண்டும். உங்கள் கனவு நினைவாக வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

537 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்

விழாவில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் ஆகிய துறைகளை சேர்ந்த 537 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் புவனேஷ் குமார், தமிழ் துறை தலைவர் கரு.முருகேசன், மாநில பொதுக்குழு உலகநாதன், வட்டாரத் தலைவர் முருகேசன், கவுன்சிலர் அமுதா சரவணன், ஓ.பி.சி. மாவட்ட தலைவர் சரவணன் பகவான், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிக்குமார், நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரச் செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் ஆதவன் அதியமான், ராஜா தேசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story